வெளியிடப்பட்ட நேரம்: 08:42 (13/05/2017)

கடைசி தொடர்பு:11:35 (15/05/2017)

மாவோயிஸ்ட் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்கள் குடும்பத்துக்கு வீடு வழங்கிய இந்தி நடிகர்..!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மாவில் கடந்த மாதம், மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் 25 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Vivek Oberoi

இதையடுத்து, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி அளித்தன.


குறிப்பாக, கிரிக்கெட் வீரர் கம்பீர் ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகக் கூறினார். மேலும், ஐபிஎல் போட்டியில் பெற்ற ஆட்டநாயகன் விருதுக்கு கிடைத்த பரிசையும், அவர் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அர்ப்பணித்தார். இதற்கிடையே, ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இந்தி நடிகர் விவேக் ஓபராய் தற்போது உதவி செய்துள்ளார். இந்தி நடிகர் விவேக் ஓபராய் வீடு வழங்கியுள்ளார். அதன்படி, தனது கரம் கட்டுமான நிறுவனம் மூலம், மஹாராஷ்டிரா மாநிலம், தானேயில் 25 ஃபிளாட்டுகளை, ஓபராய் வழங்கியுள்ளார்.


விவேக் ஓபராய், தற்போது அஜித்தின் விவேகம் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.