Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அமித்ஷாவின் அடுத்தக்குறி, தெலுங்கானா!

2014-ம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதிலிருந்து பாஜக-வின் வெற்றிப்பயணம் தொடர்ந்து வருகிறது. கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா-வின் திட்டங்களால் தான் ஒவ்வொரு மாநிலமாக பா.ஜ.க ஆக்கிரமித்துக்கொண்டே வருகிறது எனக் கூறப்படும் வேளையில், அமித் ஷாவின் அடுத்தக் குறி தெலுங்கானா மீது விழுந்துள்ளதாகத் தெரிகிறது.

அமித் ஷா


2019-ம் ஆண்டில் வரவிருக்கும் அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்காக தனது திட்டங்களைத் துவக்கியுள்ளார் அமித்ஷா. காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையிலாக 95 நாள்களுக்கான அமித் ஷாவின் சுற்றுப்பயணத் திட்டம் வகுக்கப்பட்டது. இதன்படி, மே 22 முதல் 24-ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு தெலுங்கானாவில் முகாம் அமைக்கிறார்.

பக்கத்து மாநிலமான ஆந்திராவில் ஆளும் கட்சியுடனான கூட்டணியில் நல்ல ஒற்றுமையுடன் இருக்கும் அதே வேளையில் தெலுங்கானாவில் இன்னும் கால் பதிக்க முடியவில்லை என்னும் குறையை விரைவில் அமித்ஷா மாற்றுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்திற்கு மே 10 முதல் 12-ம் தேதி வரை முகாம் அமைப்பதாக இருந்த அமித் ஷாவின் திட்டம் திடீரென மாற்றப்பட்டதில் அரசியல் பின்னணி நிறைந்து இருப்பதாகவே கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close