Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியராகப் பிறந்ததில் அவமானமா..? மம்தா கடலில் குதிக்கட்டும்!' - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

Mamata Banerjee

சில நாள்களுக்கு முன்னர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ''மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் மக்கள் இருக்கும் நாட்டில் பிறந்ததில் வெட்கப்படுகிறேன். ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவரும் அமைதியாக, அறத்துடன் வாழ வேண்டும். யாரும் கத்தியை எடுக்கக் கூடாது'' என்று கூறியிருந்தார்.

Anil Vij'

மம்தாவின் இந்த கருத்துக்கு பா.ஜ.க தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. பா.ஜ.க தலைமையிலான ஹரியானா அரசின் விளையாட்டுத் துறை அமைச்சரான அனில் விஜ், மம்தாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ''மம்தா இந்த நாட்டில் பிறந்ததுக்கு வெட்கப்பட்டால், ஏன் அவர் கடலில் குதிக்காமல் நிலத்தில் இருக்கிறார். கொல்கத்தாவுக்கு மிக அருகிலேயே கடல் இருக்கிறது. அவர் அதில் குதிக்கட்டுமே'' என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியுள்ளார்.

 'மம்தாவின் அரசியல் வாழ்க்கையில் பல ஆண்டுகளாக நம்பிக்கைக் கொடுத்த, துணை நின்ற, அன்பு செலுத்திய மக்களுக்கு இதுபோன்ற கருத்துகளால் அவர் கைம்மாறு செய்கிறார். இத்தனை ஆண்டுகளாக அவரை ஆதரித்த அனைவரையும் அவர் அவமானப்படுத்துகிறார்' என்று  பா.ஜ.க தரப்பில் கடுமையாக கூறப்பட்டுள்ளது.. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close