Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மக்கள் வாழும் பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்... இருவர் உயிரிழப்பு!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மூன்று நாள்களில் மக்கள் வாழும் பகுதியில் இரண்டாவது தடவையாக தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். இந்திய - பாகிஸ்தான் எல்லையில் நடந்த இந்தத் தாக்குதலால் காஷ்மீரைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். மேலும், மக்கள் வாழும் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதால், அங்கிருந்தவர்கள் வேறு பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர். காஷ்மீரின் ராஜவுரி மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நேற்று அதிகாலையில் பாகிஸ்தான் ராணுவம் ஆரம்பித்த தாக்குதல், நேற்றிரவு மிகவும் அதிகரித்ததாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய தரப்பும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக இந்திய ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

''அமைதி ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத் தரப்பு நடத்திய தாக்குதலில் இரண்டு இந்திய குடிமக்கள் இறந்துள்ளனர். மேலும், மூவர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானின் இந்தத் திடீர் தாக்குதலுக்கு இந்தியத் தரப்பு தக்க பதிலடி கொடுத்து வருகின்றது'' என்று ராஜவுரியின் துணை ஆணையாளர் ஷாகித் இக்பால் கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement