வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (14/05/2017)

கடைசி தொடர்பு:08:26 (15/05/2017)

தீவிரவாதிகளின் மிரட்டல்.. கண்டுகொள்ளாத காஷ்மீர் இளைஞர்கள்!

காஷ்மீரில் தீவிரவாதிகளின் மிரட்டல்களை பொருட்படுத்தாமல் காவலர் பணி ஆட்தேர்வுக்கு சுமார் 3 ஆயிரம் இளைஞர், இளம்பெண்கள் பக்‌ஷி ஸ்டேடியத்தில் குவிந்தனர்.

kashmir youths
 

காஷ்மீரில் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையில் இளைஞர்கள் சேரக்கூடாது என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நாள்கள் முன்னர் இந்திய ராணுவத்தின் இளம் அதிகாரி உமர் பயஸை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தனர். காஷ்மீரின் சோபியான் பகுதியைச் சேர்ந்த உமர், உறவினர் திருமணத்துக்குச் சென்றபோது தீவிரவாதிகள் அவரைக் கடத்தி கொலை செய்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்தனர். மேலும் பாதுகாப்புப் படையில் இளைஞர்கள் சேரக்கூடாது என்று அவர்களுக்கு பயத்தை உருவாக்கவே தீவிரவாதிகள் உமரை கடத்திக் கொன்றனர் என்றும் போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.

இந்நிலையில் காஷ்மீரின் பக்‌ஷி ஸ்டேடியத்தில் நேற்று போலீஸ் பணிக்கு ஆட்தேர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் இளைஞர்கள், இளம்பெண்கள் உட்பட சுமார் 2000 பேர் பங்கேற்றனர். காஷ்மீர் முழுவதும் நடைபெற்று வரும் இந்த போலீஸ் பணி ஆட்தேர்வு முகாமில் இதுவரை 6000 இளம் பெண்கள் பங்குபெற்றுள்ளதாக ஜம்மு- காஷ்மீர் டிஜிபி எஸ்.பி.வயத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்!

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க