கெஜ்ரிவால் மீது ஊழல் குற்றம்சாட்டிய கபில் மிஷ்ரா திடீர் மயக்கம்!

கெஜ்ரிவால் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டிய கபில் மிஷ்ரா இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது மயக்கமடைந்தார்.

கபில் மிஷ்ரா

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் 2 கோடி லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டினார் ஆம் ஆத்மியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஷ்ரா. இதையடுத்து ஆம் ஆத்மி தலைவர்கள் தங்கள் வெளிநாட்டு சுற்றுலா விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். 5 நாள்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

இதையடுத்து 'தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் கணக்குகள் விவரம் முறைகேடானவை. இதன் மூலம் கறுப்புப் பணம் மாற்றப்பட்டுள்ளது. கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்கள் பல ஷெல் கம்பெனிகள் நடத்துகின்றனர். ஆம் ஆத்மி கட்சியினருக்கும் இதில் தொடர்புண்டு என அவர் கூறினார். இதன் மூலம் கெஜ்ரிவால் ஊழல் செய்துள்ளது தெரியவந்துள்ளது என்று கபில் மிஷ்ரா குற்றம்சாட்டினார். இதனிடையே 55 நாள்கள் உண்ணாவிரதம் காரணமாக அவர் மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!