அப்பாவி இளைஞர் மீது கொடூரத் தாக்குதல்... பசு காவலர்கள் அராஜகம்!

மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜைனி மாவட்டத்தில் அப்பாவி ஒருவர் பசு காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பசு

வட மாநிலங்களில் பசுவதை புரிவோர்க்கு எதிராகப் பசு காவலர்கள் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். உபி, அஸ்ஸாம், ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களில் பசு காவலர்களால் அப்பாவி மக்கள் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர் பசு காவலர்கள்.

மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் பசு மாட்டை காயப்படுத்தியதாக அப்பாவி இளைஞர் ஒருவர் மீது சந்தேகப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட பசு காவலர்கள் அவரை அடித்து உதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இதையடுத்து தாக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட பசு காவலர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!