வெளியிடப்பட்ட நேரம்: 11:22 (15/05/2017)

கடைசி தொடர்பு:16:11 (15/05/2017)

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி காலமானார்

புதுச்சேரி முன்னாள் முதல்வர் ராமசாமி, உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 85.  அவர் கடந்த 1972 மற்றும் 1974 ஆண்டுகளில், அ.தி.மு.க ஆட்சியில் முதல்வராகப் பதவி வகித்தவர். அதாவது, கடந்த 1974-ல் 22 நாட்களும், 1977 முதல் 1978 வரை, ( 1 வருடம், மூன்று மாதங்கள்) முதல்வராகப் பதவி வகித்தவர். அதன் பிறகு, காங்கிரஸ் கட்சியில் சிறப்பு அழைப்பாளராக இருந்தார். 

Ramasamy


இதற்கிடையே  வயது முதிர்வின் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாகவும், இன்று காலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ராமசாமியின் மறைவுக்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில், ராமசாமியின் இறுதிச் சடங்கு, அவரது சொந்த ஊரான காரைக்காலில் இன்று நடக்கிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க