வெளியிடப்பட்ட நேரம்: 13:42 (15/05/2017)

கடைசி தொடர்பு:14:21 (15/05/2017)

ஆதாரங்கள் என்று கூறப்படும் ஆடியோ சிடி கேட்டு டி.டிவி.தினகரன் தரப்பில் மனு!

தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை வாங்கித் தர லஞ்சம் பெற்றதாக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரை டெல்லி காவல்துறையினர் கைதுசெய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, டெல்லி குற்றப்பிரிவு போலீஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தது.

Dinakaran


 விசாரணை முடிந்த பின்பு, கடந்த 1-ம் தேதி, டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து, அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. அவரது நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்தது. டெல்லி நீதிமன்றத்தில், தினகரன் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.


அப்போது தினகரன், அவர் நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்ட  நான்கு பேரின்  நீதிமன்றக் காவலை, மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


இதற்கிடையே, தினகரன், சுகேஷ் சந்திரசேகரனின் குரல் பதிவுசெய்யப்பட்டது தொடர்பான சி.டியைக் கேட்டு, டெல்லி நீதிமன்றத்தில் தினகரன் தரப்பில் மனுத் தாக்கல்செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை, மே 18-க்கு ஒத்திவைக்கப்பட்டது.