ஜிஎஸ்எல்வி மார்க்-3: அடுத்த சாதனைக்குத் தயாராகும் இஸ்ரோ! | GSLV Mrk III: ISRO'S geared up for another success!

வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (15/05/2017)

கடைசி தொடர்பு:14:43 (15/05/2017)

ஜிஎஸ்எல்வி மார்க்-3: அடுத்த சாதனைக்குத் தயாராகும் இஸ்ரோ!

இந்தியாவின் முதல் கன ரக ஏவுகணையான ஜிஎஸ்எல்வி மார்க் III ஏவுகணை, ஜூன் மாதம் விண்ணில் பாயத் தயாராகிவருகிறது. இந்தியாவின் இந்த முதல் முயற்சியில் வெற்றி அடைவதற்காக, இஸ்ரோ முழுவீச்சில் செயல்பட்டுவருகிறது.

இஸ்ரோ ஏவுகணை


’தெற்கு ஆசிய செயற்கைக்கோள்’ மூலம் கிடைத்த வெற்றிக்களிப்பில் இருக்கும் இஸ்ரோ, தனது அடுத்த சாதனையைப் புதிய கன ரக ஏவுகணை மூலம் நிகழ்த்தத் தயாராகிவருகிறது. இந்தப் புதிய ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஏவுகணையின் முக்கிய அம்சமே, இஸ்ரோ விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கன ரக க்ரியோஜெனிக் இன்ஜின். 640 டன் எடையுள்ள செயற்கைக்கோளுடன் முதன்முதலாகப் பாய உள்ளது, ஜிஎஸ்எல்வி மார்க்-3.


ஜிஎஸ்எல்வி மார்க்-3 ஏவுகணை, ஜிஎஸ்எல்வி-19 என்ற செயற்கைக்கோளுடன் தயாராகிவருகிறது. தகவல் தொடர்புக்கான 3.2 டன் எடையுள்ள இந்தச் செயற்கைக்கோள், இஸ்ரோவின் 12 ஆண்டு கால உழைப்பாகும். மே மாதம் விண்ணில் பாய்வதற்காகத் தயாராகி வந்த இந்த ஏவுகணையின் சில சோதனை முயற்சிகளை முடிக்க வேண்டியிருந்ததால், ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முற்றிலும் தயாரான நிலையில், ஸ்ரீஹரிகோட்டா ஏவுகணைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.