Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அரசியல் நாடகம் நடத்தப் பார்க்கிறது இந்தியா! பாகிஸ்தான் குற்றச்சாட்டு

'சர்வதேச நீதிமன்றத்தை அரசியல் நாடகம் நடத்தும் மேடையாக இந்தியா பயன்படுத்துகிறது' என்று பாகிஸ்தான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜாதவ்

இந்திய முன்னாள் கப்பல் படை வீரர் குல்பூஷன் ஜாதவ்வை, 'ரா' அமைப்பின் உளவாளி எனக் கைதுசெய்த பாகிஸ்தான், அவருக்கு மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில், இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல்செய்யப்பட்டது. இதனிடையே, இன்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இன்று நடைபெற்ற விசாரணையின்போது, 'சர்வதேச நீதிமன்றத்தை அரசியல் நாடகம் நிகழ்த்தும் மேடையாக இந்தியா பயன்படுத்துகிறது' என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவ் விடுதலையை அனுமதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே, இந்தியாவின் தரப்பில் குல்பூஷனிடமிருந்து வற்புறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement