வெளியிடப்பட்ட நேரம்: 00:41 (16/05/2017)

கடைசி தொடர்பு:08:20 (16/05/2017)

புதுச்சேரி காவல்துறையில் நவீன ரோந்து வாகனத் திட்டம்!

புதுச்சேரி சுற்றுலாத்தலங்களில் முக்கியமானது, கடற்கரைச் சாலை. சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரமுள்ள இந்தச் சாலையில் காலை, மாலை மற்றும் வார இறுதி நாட்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படும். இதனால், இங்கு 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர். ரோந்துப் பணியை எளிமையாக்குவதற்காக, இந்தியாவிலேயே முதல்முறையாக, நவீன மின்சார ரோந்து வாகனத் திட்டத்தை புதுச்சேரி காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்த, இந்தத் திட்டம் உதவும் என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த நவீன வாகனத்தில் ரோந்து செல்லும் காவலர்களை சுற்றுலாப்பயணிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து, செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.

 

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க