Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சட்டசபையில் தூங்கிய எம்எல்ஏ-க்கள்!- வைரலாகும் வீடியோ

உத்தரப்பிரதேச சட்டசபையில், ஜி.எஸ்.டி கூட்டத்தின்போது பெண் எம்எல்ஏ-க்கள் உள்பட பலர் குறட்டைவிட்டுத் தூங்கிய வீடியோ காட்சிகள், நேரடி ஒளிபரப்பில்  வலம் வந்துகொண்டிருக்கின்றன. உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க., வெற்றிபெற்று, முதல்வராக யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி நடந்துவருகிறது. பா.ஜ.க., ஆட்சி அமைந்த பின்னர், மே 15-ம் தேதி சட்டசபைக் கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார். 

ஜி.எஸ்.டி கூட்டம் - உத்தர பிரதேசம்

சட்டசபை நிகழ்ச்சிகள், தூர்தர்ஷன்மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகக் கூறி, சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. அப்போது, கவர்னர் ராம்நாயக்கின் மீது காகிதப் பந்துகளும் வீசப்பட்டன. ஜி.எஸ்.டி மசோதா ஏற்கெனவே பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிவிட்டது. இப்போது, மாநிலங்களில் நிறைவேற்றப்பட உள்ளது. ஏற்கெனவே, ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் என யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்துவிட்டார். மாநில சட்டசபையில் இன்று ஜி.எஸ்.டி கூட்டம் நடைபெற்றது. அப்போது, எம்எல்ஏ-க்கள் பலர் குறட்டைவிட்டுத் தூங்கினர். இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement