வெளியிடப்பட்ட நேரம்: 07:22 (16/05/2017)

கடைசி தொடர்பு:07:47 (16/05/2017)

இன்று புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்

puducherry

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று, பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமி அமைச்சரவைக்கும் இடையே கடும் மோதல் நிலவிவருவது பலரும் அறிந்ததே. இந்த பரபரப்பான சூழலில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால், கவர்னர் கிரண்பேடி கலந்துகொண்டு உரையாற்ற இருக்கிறார்.

ஏற்கெனவே, கடந்த மார்ச் மாதம் 30, 31-ம் தேதி புதுவை சட்டப்பேரவை கூட்டப்பட்டது. அப்போது, மூன்று மாதங்களுக்கான இடைக்கால செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்நிலையில், இந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாக நாளை ஜி.எஸ்.டி சட்டவரைவு மசோதா நிறைவேற்றப்படுகிறது. வரும் 25-ம் தேதி முதல்வரும்  நிதியமைச்சருமான நாராயணசாமி, முழு பட்ஜெட்டையும் தாக்கல்செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதன் மீதான விவாதங்கள் நடைபெறும். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க