வெளியிடப்பட்ட நேரம்: 11:58 (17/05/2017)

கடைசி தொடர்பு:12:28 (17/05/2017)

நீட் தேர்வு சோதனை கெடுபிடி :  மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வின்போது, மாணவியின் உள்ளாடையை அகற்றச் சொன்ன விவகாரத்தில், மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

CBSE notice
 

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, ’நீட்’ கடந்த 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.  இந்தத் தேர்வை நடத்திய சி.பி.எஸ்.இ ஆணையம், முறைகேடுகளைத் தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால், மாணவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளானதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனிடையே, நீட் தேர்வின்போது கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில், தேர்வு எழுதவந்த மாணவியின் உள்ளாடையை அகற்றுமாறு கண்காணிப்பாளர் உத்தரவிட்டது, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு விளக்கம் அளித்த சி.பி.எஸ்.இ, ‘சில கண்காணிப்பாளர்களின் தனிப்பட்ட ஆர்வமிகுதியால் இவ்வாறு நடந்துவிட்டது’ என்று குறிப்பிட்டது.  

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் சி.பி.எஸ்.இ-க்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, நான்கு வாரத்துக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க