Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆதார் தொடர்பான வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகல்!

ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. இந்த வழக்கில் இருந்து நீதிபதி நாகேஸ்வர ராவ் விலகியுள்ளார்.

ஆதார்

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மத்திய, மாநில அரசுகளின் அத்தனை நலத்திட்ட உதவிகளைப் பெறவும், இன்னபிற சலுகைகளைப் பெறவும் ஆதார் அவசியமாகிறது. ரேஷன் கார்டு, பான் கார்டு, கேஸ் மானியம், ஓட்டுநர் உரிமம் என முக்கிய அரசு ஆவணங்களுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஆதார் எண் கட்டாயமாக்கப்படுவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை, நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையேற்று விசாரித்துவந்தார். தற்போது, மத்திய அரசின் சார்பாக இதற்கு முன்னர் ஒரு வழக்கில் ஆஜரானதால், இந்த வழக்கிலிருந்து விலகியுள்ளார் நாகேஸ்வர ராவ்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement