திருப்பதியைத் தாக்கிய ‘ரான்சம்வேர்’ வைரஸ்!

உலகை அதிரவைத்து வரும் ‘ரான்சம்வேர்’ வைரஸ் தற்போது ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகத்திலுள்ள கணினிகளைத் தாக்கியுள்ளது.

திருப்பதி

கடந்த சில நாள்களாகவே உலக நாடுகளைப் பெரும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கியுள்ளது ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்குதல். ஒவ்வொருவரது கணினியிலும் உள்ள முக்கியத் தகவல்களை எடுத்து வைத்துக்கொண்டு, மிரட்டிப் பணம் பறிக்கும் இந்த ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல், கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளைத் தாக்கியுள்ளது. ஒரே நாளில் லட்சக்கணக்கான சர்வர்களைத் தாக்கி தன்னை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்ட இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸ் பல மடங்கு வேகத்தில் செயல்படவுள்ளது என சைபர் க்ரைம் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்காவின் ட்ரம்ப் அரசாங்கமும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பலவாறு முயற்சித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் ஆந்திரா மாநிலத்திலுள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் கணினிகளை ‘ரான்சம்வேர்’ வைரஸ் தாக்கியுள்ளது. இதனால், பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதில் பாதிப்பு ஏதும் ஏற்படாது எனவும் சர்வர்கள் சரி செய்யப்பட்டுவிட்டன என்றும் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதலின் பின்னணி குறித்துத் தெரியாதிருந்தநிலையில், தற்போது இதில் பயன்படுத்தப்படும் குறீயீடுகள் வடகொரியாவைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கூறப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!