Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வருமான வரி சோதனை எதிரொலி... பா.ஜ.க அலுவலகம் மீது தாக்குதல்!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனையை அடுத்து பாட்னாவில் பா.ஜ.க அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

கலவரம்

Representative Image

பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது ஊழல் குற்றசாட்டை முன்வைத்தார். மேலும் லாலுவின் குடும்பத்தினர் பினாமிகள் மூலம் 1000 கோடி ரூபாய் சொத்துக் குவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதையடுத்து நேற்று லாலுவின் மகன் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான 22 இடங்களில் வருமான வரித்துறை அதிரடிச் சோதனை மேற்கொண்டது.

இதனிடையே இன்று பீகார் தலைநகர் பாட்னாவில் பா.ஜ.க அலுவலகம் மீது ராஷ்டிரிய ஜனதா தள கட்சியினர் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட லாலுவின் ஆதரவாளர்கள் பா.ஜ.க அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தத் தாக்குதலைக் கண்டித்தும் லாலு பிரசாத் யாதவ்வின் மகன் மற்றும் தேஜ் பிரதாப் உள்ளிட்டோரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் நாளை பா.ஜ.க.வின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement