கருணாநிதியின் வைரவிழாவில் பங்கேற்கிறார் ராகுல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ராகுல் காந்தி


தி.மு.க தலைவர் கருணாநிதி, சட்டசபை உறுப்பினராகி இந்த ஆண்டுடன் 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதைக் கொண்டாடும் வகையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ல் வைரவிழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொள்கிறார். பீகார் முதல்வர் நிதிஷ்குமார், கம்யூனிஸ்ட் தலைவர்கள், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் இவ்விழாவில் பங்கேற்கின்றனர். காவிரிப் பிரச்னை காரணமாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா இவ்விழாவில் கலந்துகொள்ள மாட்டார் எனத் தெரிகிறது. மேலும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோர் இவ்விழாவில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!