வெளியிடப்பட்ட நேரம்: 11:52 (18/05/2017)

கடைசி தொடர்பு:12:28 (18/05/2017)

இந்தியாவில் 10 புதிய அணு உலைகளை அமைக்க அனுமதி வழங்கியது மத்திய அரசு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் புதிதாக 10 அணு உலைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

KNPP

இந்தப் புதிய அணு உலைகள் மூலம், 7,000 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய முடியும் என அரசுத் தரப்பு தெரிவிக்கிறது. இந்தப் புதிய அணு உலைகளைக் கொண்டுவரும் திட்டம், 70,000 கோடி ரூபாய் வியாபாரத்தையும் 33,000 வேலைகளையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது. இவையனைத்தும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட உள்ளன. 'மேக் இன் இந்தியா' திட்டத்தின்மூலம் செயல்படுத்தப்படும் மிகப் பெரிய புராஜெக்ட்டாக இது இருக்கும் என அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது. 

தற்போது, இந்திய அளவில் அணு உலைகள்மூலம் பெறப்படும் மின்சாரம், 2 சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. இந்த அளவை 2032ஆம் ஆண்டுக்குள் 25 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுவருகிறது.  

இதுகுறித்து அரசுத் தரப்பு, '70,000 கோடி ரூபாய் வியாபார வாய்ப்புள்ள இந்தத் திட்டத்தின்மூலம், இந்தியாவின் அணுசக்தித் துறையே முற்றிலுமாக மாறும்' என்று கூறுகிறது.