வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (18/05/2017)

கடைசி தொடர்பு:07:12 (19/05/2017)

சேவை மற்றும் சரக்கு வரி : பாலுக்கு முழு வரி விலக்கு!

சரக்கு மற்றும் சேவை வரியில் பாலுக்கு விலக்கு அளிக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. 

ஜி.எஸ்.டி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் சரக்கு மற்றும் சேவை வரி மீதான விவாதம் நடைபெற்றது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துக்கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநிலப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதையடுத்து பால் மற்றும் தானியங்கள் மீதான வரி முழுமையாக விலக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருவாய் செயலர் அஸ்முக் அதியா கூறுகையில், '81 சதவிகித பொருள்களுக்கு 18 சதவிகித வரி விதிக்கப்பட்டிருப்பதாக' தெரிவித்தார். மேலும் சமையல் எண்ணெய், சர்க்கரை, தேயிலை, காபி உள்ளிட்ட பொருள்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கபட்டுள்ளது. சோப்பு, பற்பசை, ஹேர் ஆயில் உள்ளிட்ட பொருள்களுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.