கங்கையை சுத்தப்படுத்த நிதிஷ்குமாரின் யோசனை!

நிதிஷ் குமார்

பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக பதவியேற்றபோது, நாட்டின் ஜீவநதியாகக் கருதப்படும் கங்கை நதியை சுத்தப்படுத்துவேன் என்று சூளுரைத்தார். ஆனால், மத்திய அரசு நடவடிக்கைகள் சிலவற்றை எடுத்த பின்னரும் இந்நாள் வரை கங்கையின் சுத்தம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மேம்பட்டதாகத் தெரியவில்லை.

இந்நிலையில்தான் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், டெல்லியில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கங்கையைச் சுத்தப்படுத்துவது பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, 'கங்கை நதி இப்போது சுத்தமாக இல்லை. அது சுத்தமாக இருக்கவேண்டுமானால், அதன் நீரோட்டம் சீரானதாக இருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரை கங்கை சுத்தமாக இருக்காது. வண்டல் மண் போன்ற பல பொருள்களால், கங்கையின் இயற்கையான நீரோட்டம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால்தான், கங்கையில் அடிக்கடி வெள்ளமும் ஏற்படுகிறது. இந்த பொருள்களை தூர்வாரும் வரை கங்கையில் நீரோட்டம் சீராக இருக்காது.' என்று கூறியுள்ளார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான அரசியல் நிலைப்பாடு எடுத்திருந்த நிதிஷ்குமார் பின்னர், மத்திய அரசுடன் தொடர்ந்து இணக்கமான உறவை பேணி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!