வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (19/05/2017)

கடைசி தொடர்பு:17:23 (19/05/2017)

பிரதமர் மோடியை சந்தித்தார் சச்சின் டெண்டுல்கர்!

பிரதமர் நரேந்திர மோடியை இன்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவன் சச்சின் டெண்டுல்கரின் வாழ்கையைத் தழுவி 'சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ்' திரைப்படம் வெளியாகவுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ள சச்சின், தனது ரசிகர்களை மீண்டுமொரு முறை மகிழ்விக்க, மீண்டுமொரு முறை மெய்மறக்கச் செய்ய  தியேட்டர்களில் இம்மாதம் வருகிறார். இந்த பயோகிராஃபியில் அவரே சச்சின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர்.ரகுமான், இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது.

இதனிடையே இன்று பிரதமர் மோடியை சச்சின் சந்தித்தார். அப்போது சச்சின் திரைப்படத்தைப் பற்றி மோடியிடம் கூறியுள்ளார். மேலும் பிரதமரிடமிருந்து வாழ்த்துகளையும் அவர் பெற்றுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் 26-ம் தேதி வெளியாகிறது.