வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (19/05/2017)

கடைசி தொடர்பு:15:56 (19/05/2017)

இந்தியாவில் கார் விற்பனையை நிறுத்திக் கொள்கிறது ஜெனரல் மோட்டார்ஸ்

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்த ஆண்டுடன் இந்தியாவில் தனது செவ்ரொலே பிராண்டு கார் விற்பனையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.

மோடார்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவில் கால்பதித்து 21 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தாலும், இன்னமும்கூட அவர்களால் போட்டி மிகுந்த இந்திய கார் சந்தையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை. கார் விற்பனை மற்றும் நஷ்டம் என இரண்டும் ஒருசேர கடும் வீழ்ச்சியைச் சந்தித்ததால், ஆண்டுக்கு 1.1 லட்சம் கார்களை உற்பத்திசெய்யும் குஜராத்தில் இருக்கக்கூடிய தனது கார் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி மூடுவிழா நடத்தியது.

தற்போது, இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக புனேவில் இருக்கக்கூடிய மற்றொரு கார் தொழிற்சாலையில், இனி ஏற்றுமதிக்குத் தேவையான அளவு கார்கள் மட்டுமே உற்பத்திசெய்யப்படும் என அறிவித்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். மேலும் அந்நிறுவனம், இந்த ஆண்டு இறுதியோடு இந்தியாவில் தனது கார்களின் விற்பனையை நிறுத்த முடிவெடுத்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க