Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜிஎஸ்டி வரி நிர்ணயம்: அத்தியாவசியப் பொருள்கள் விலை குறைய வாய்ப்பு!

'சரக்கு மற்றும் சேவை வரியில் கல்வித்துறைக்கு முழு விலக்கு அளிக்கப்படும்' என இன்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

அருண் ஜெட்லி

ஜம்மு- காஷ்மீர் மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில், இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தொடரில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமை தாங்கினார். ஒவ்வொரு பொருளுக்குமான வரிவிதிப்பு குறித்து இந்தக் கூட்டத்தொடரில் ஆய்வுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. முழு ஜிஎஸ்டி வரிவிதிப்பு நிலவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், சில வரிவிதிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

அவர், ‘கல்வி, பால், சுகாதாரம் ஆகியவற்றுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. பல பொருள்களுக்கும், சேவைகளுக்கும் பழைய வரிவிதிப்பு நிர்ணயங்களே தொடரும் என்றாலும், போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து வரிகளும் 5%, 12%, 18%, 28% என நான்கு வகைகளில் விதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கு கணிசமாக விலை குறையும்’ எனத் தெரிவித்தார்.

இன்று, ஆலோசனைக் கூட்டம் மட்டுமே நடைபெற்றது. ஜூலை 1 ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி வரிவிதிப்பில், புதிய மாற்றங்கள் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி நிர்ணயப் பட்டியலில், உணவகங்களுக்கு 5 சதவிகிதமும், அதுவே, ஏசி இருந்தால் 12 சதவிகித சேவை வரி. கோதுமை, அரிசி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட உள்ளது. ஆடம்பர கார்களுக்கு 28 சதவிகித வரி. அத்தியாவசியப் பொருள்களான டூத்பேஸ்ட், சோப்பு வகைகளுக்கான வரி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது.

இந்தப் புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பில், கேளிக்கை வரிகளும் சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close