குரல் மாதிரிகளைச் சோதனை செய்ய டி.டி.வி. தினகரன் மறுப்பு : காரணம் இதுதான்

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் கமிஷனுக்கு 50 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜூனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், ஹவாலா ஏஜென்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

Dinakaran


பின்னர் அவர்கள் டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான நீதிமன்றக் காவலை வருகிற 29-ம் தேதி வரை நீடித்து கடந்த திங்கட்கிழமை நீதிபதி பூனம் சௌத்ரி உத்தரவிட்டார்.


இந்நிலையில் தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை சி.பி.ஐ ஆய்வு மையத்தில் ஆய்வு செய்ய அனுமதி கோரி டெல்லி போலீஸார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதற்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தது. இதையடுத்து, தினகரனை இன்று நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, குரல் மாதிரி பரிசோதனைக்கான மனு மீது  தினகரனின் கருத்தைப் பெற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, குரல் மாதிரியை பதிவு செய்ய நீதிமன்றத்தில், டி.டி.வி. தினகரன் மறுப்பு தெரிவித்துள்ளார்,


குற்றவியல் சட்டத்தில் குரல் மாதிரியைப் பதிவு செய்ய விதிகள் இல்லை என டி.டி.வி. தினகரன் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!