வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (20/05/2017)

கடைசி தொடர்பு:16:16 (20/05/2017)

’குல்பூஷன் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றத்தை நாடியது தவறு’: மார்க்கண்டேய கட்ஜூ

பாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றதன் மூலம் இந்தியா மிகப்பெரும் தவறு செய்துவிட்டதாக மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்துள்ளார்.

மார்க்கண்டேய கட்ஜூ

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தன் ஃபேஸ்புக் பக்கத்தில் குல்பூஷன் ஜாதவ் குறித்து கருத்துப் பதிவு செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ‘குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தினை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றதன் மூலமாக இந்தியா பெரும் தவறிழைத்துவிட்டது. தனி ஒரு நபருக்காக வழக்கினை சர்வதேச நீதிமன்றம் சென்றது பாகிஸ்தானுக்கு சாதகமாகி உள்ளது’ என்றார்.

மேலும் இவ்விவகாரம் குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘தற்போது காஷ்மீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களையும் சர்வதேச நீதிமன்றத்துக்கு பாகிஸ்தான் கொண்டு செல்ல வாய்ப்புள்ளது. குல்பூஷன் வழக்குக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பதற்கு இதுதான் காரணம்’ என்று பதிவிட்டுள்ளார்.