ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு மீண்டும் நோட்டீஸ்!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

maran brothers
 

ஏர்செல் - மேக்சிஸ் பண மோசடி வழக்கில், தயாநிதிமாறன் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோர்  குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இருவரையும் இந்த வழக்கிலிருந்து விடுவித்து, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி, பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்தார்.
  
மாறன் சகோதரர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து,  டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டது. இந்த மனுவை, மே 19 ஆம் தேதி விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து மாறன் சகோதரர்கள் நான்கு வாரங்களுக்குள் பதில் மனுத்தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், மாறன் சகோதரர்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 'அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும்' என்று மாறன் சகோதரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதற்கிடையே, பி.எஸ்.என்.எல் இணைப்பு முறைகேடு வழக்கு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றப்பத்திரிகையைப் பெற, மாறன் சகோதரர்கள் இன்று ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 6ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!