Published:Updated:

தொடர் கனமழை: ஒடிசாவில் வெள்ளத்துக்கு 9 லட்சம் பேர் பாதிப்பு... உத்தரகாண்ட், இமாச்சலில் 38 பேர் பலி!

ஒடிசாவில் கிராமத்தைச் சூழ்ந்த மழைநீர்

ஒடிசாவில் பெய்துவரும் கனமழைக்கு 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநில மழைக்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

தொடர் கனமழை: ஒடிசாவில் வெள்ளத்துக்கு 9 லட்சம் பேர் பாதிப்பு... உத்தரகாண்ட், இமாச்சலில் 38 பேர் பலி!

ஒடிசாவில் பெய்துவரும் கனமழைக்கு 9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாநில மழைக்கு 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

Published:Updated:
ஒடிசாவில் கிராமத்தைச் சூழ்ந்த மழைநீர்

வட மாநிலங்களில் இந்த ஆண்டு பருவமழை சரியாகப் பெய்யாமல் இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாள்களாக வடமாநிலங்களில் கனமழை பெய்துவருகிறது. மத்தியப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் போபால், உஜ்ஜைனி போன்ற பல இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்டில் 13 பேரைக் காணவில்லை. மாநிலத்தில் 115 சாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. இமாச்சலப் பிரதேச நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆறு பேரைக் காணவில்லை. நிலச்சரிவு மற்றும் மழையால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் நேரில் சென்று பார்வையிட்டு உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

தொடர் கனமழை: ஒடிசாவில் வெள்ளத்துக்கு 9 லட்சம் பேர் பாதிப்பு... உத்தரகாண்ட், இமாச்சலில் 38 பேர் பலி!

ராஜஸ்தானிலும் கடந்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்திருக்கிறது. இதனால் கோடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஒடிசாவில் பெய்துவரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழையால் 9.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து இதுவரை மாநில அரசு 1.2 லட்சம் பேரை பத்திரமான இடத்துக்கு இடமாற்றம் செய்துள்ளது. குடிநீர் மற்றும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தில் ஆங்காங்கே சாலைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டுவிட்டன. 134 கிராமங்களை ஆற்று வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. ரதன்பூர், தசமந்தாபூர் உட்பட சில கிராமங்கள் முற்றிலும் நீரில் மூழ்கியிருக்கின்றன. அங்கு பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணி நடந்துவருகிறது. இதுவரை 70 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.