Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வெளிச்சத்துக்கு வந்தது எடியூரப்பா நாடகம்!

கர்நாடக சட்டசபைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதையொட்டி, அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தல் பணிகளில் பிஸியாகியுள்ளனர். இதற்கிடையே, கர்நாடகா பா.ஜ.க தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான எடியூரப்பா, கர்நாடக மாநிலம் துமாகூர் மாவட்டத்தில், தலித் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது, அவர்களது வீட்டில் எடியூரப்பா உணவருந்தியுள்ளார்.

Yeddurappa


இந்த நிலையில் எடியூரப்பா, ஹோட்டலில் வாங்கிய உணவைத்தான் தலித் வீட்டில் உண்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, எடியூரப்பா தீண்டாமையைக் கடைப்பிடித்ததாகக் கூறி, அவர்மீது மாண்டியா காவல் நிலையத்தில், இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, எடியூரப்பாவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுவருகின்றன.

இதற்கிடையே, ஹோட்டலில் உணவு வாங்கியதை அவரின் செய்தித் தொடர்பாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "எடியூரப்பாவுக்குப் பிடித்த சில உணவுகள் மட்டுமே ஹோட்டலில் வாங்கப்பட்டது. ஆனால், அவர் தலித் வீட்டில் செய்யப்பட்ட உணவையும் சாப்பிட்டார். தேர்தல் நேரத்தில், பிற கட்சிகள் இதைப் பெரிதுபடுத்துகின்றன" என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement