கெஜ்ரிவாலுக்கு கிடுக்குப்பிடி போடும் ஜெட்லி!

கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் ஜெட்லி, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டிருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த 15 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெற்றது. அப்போது கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, ஜெட்லியை தகாத வார்த்தைகளால் தூற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஜெட்லி சார்பில் ஆஜரான வழக்கஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். மேலும், வழக்கை விசாரித்த நீதிபதி மன்மோகனும், 'ராம் ஜெத்மலானியின் அவதூறு பேச்சுகள் கெஜ்ரிவாலின் சொல்படி நடந்திருக்க வாய்ப்புள்ள பட்சத்தில், அதற்கு அவர் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டும்' என்று கறாராக கூறியிருந்தார்.

இந்நிலையில், அவதூறு வழக்கின்போது தன்னை தரக்குறைவாக பேசியதாக ஜெட்லி, கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கை பதிந்துள்ளார். இம்முறையும் ஜெட்லி, நஷ்டஈடாக 10 கோடி ரூபாய் கேட்டுள்ளார். மத்திய அரசு, டெல்லி அரசுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பல்வேறு வழிகளில் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில், ஜெட்லியும் டெல்லி முதல்வர் மீது தொடர் அவதூறு வழக்கு தொடர்ந்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!