வெளியிடப்பட்ட நேரம்: 17:43 (22/05/2017)

கடைசி தொடர்பு:17:42 (22/05/2017)

சகாயத்துக்கு சல்யூட் அடிக்கும் மார்க்கண்டேய கட்ஜு

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, தமிழ்நாட்டு விஷயங்கள் பற்றி தொடர்ந்து தன் கருத்தை பொதுத்தளத்தில் எந்தவித அச்சமும் இன்றி பதிவு செய்து வருகிறார். கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்கான ரஜினி அரசியல் பேச்சி குறித்தும், தன் அதிரடி கருத்தைப் பதிவிட்டார். 

'ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ என்று எந்தவித அச்சமுமின்றி கட்ஜு தன் கருத்தை இணையம் வாயிலாக வெளிப்படுத்தினார். 

இந்நிலையில், 'வெல்டன் சகாயம்' என்று, சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் விக்கிபீடியா பக்கத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கட்ஜு. சகாயம் தொடர்ச்சியாக, 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற கொள்கையின் மூலம் தமிழகத்தில் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுகுறித்து, அவரது விக்கிபீடியா பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்துவிட்டுத்தான் கட்ஜு இவ்வாறு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.