Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அருந்ததி ராயை ராணுவ ஜீப்பில் கட்டுங்கள்'- பாலிவுட் நடிகரின் சர்ச்சை கருத்து!

புக்கர் பரிசு வென்ற எழுத்தாளரான அருந்ததி ராயை 'ராணுவ ஜீப்பில் கட்டுங்கள்' என்று சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் பாலிவுட் நடிகர் மற்றும் பா.ஜ.க எம்.பியுமான பரேஷ் ராவல்.

அருந்ததி ராய், தனது முதல் நாவலான 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்'-ஐ இருபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். அந்த புத்தகத்துக்குத்தான் அவர் இலக்கிய உலகில் மிகவும் மதிக்கப்படும் புக்கர் விருதை வென்றார். இதையடுத்து, அவர் மாவோயிஸ்ட்கள் பற்றியும் காஷ்மீர் பிரச்னை பற்றியும் தொடர்ச்சியாக இந்திய அரசுக்கு எதிரான கருத்தை பொதுத் தளத்தில் பதிவு செய்து வருகிறார். அடுத்த மாதம் அவருடைய இரண்டாவது நாவலான, 'The Ministry of Utmost Happiness' வெளியாக உள்ளது. 

இந்நிலையில்தான் பரேஷ், 'கிளச்சியாளர்களைக் கட்டுவதற்குப் பதில் அருந்ததி ராயை ராணுவ ஜீப்பில் கட்டுங்கள்' என்று கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் ராணுவத்தினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான பிரச்னை வீரியம் அடைந்துள்ளது. இதையொட்டி சென்ற மாதம்  ராணுவ வீரர்கள், கிளர்ச்சியாளர்கள் தங்கள் மீது கல் வீசுவதைத் தடுக்க அவர்களின் ஜீப் முன்பு கிளர்ச்சியாளர்களில் ஒருவரைக் கட்டி வண்டியை ஓட்டிச் சென்றனர். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியானது. பெரும் கண்டனங்களுக்கு உள்ளான இந்த சம்பவத்தை வைத்துதான் 'அருந்ததி ராயை ராணுவ ஜீப் முன்பு கட்டுங்கள்' என்று கூறியுள்ளார் பரேஷ். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close