பாகிஸ்தானுக்கு பதிலடி! எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் | Indian army attack Pakistan in border

வெளியிடப்பட்ட நேரம்: 15:52 (23/05/2017)

கடைசி தொடர்பு:17:13 (23/05/2017)

பாகிஸ்தானுக்கு பதிலடி! எல்லையில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ராணுவம்

கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. பல இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா சரியான பதிலடி தர வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதனால் காஷ்மீர் எல்லைப்பகுதிகள் பதற்றம் நிறைந்து காணப்பட்டன.

இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். காஷ்மீர் எல்லைப்பகுதிகளான ரஜோரி, நவ்ஷேரா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. எல்லை தாண்டிய ஊடுருவலைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக மேஜர் ஆசோக் நரூலா தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.