நர்மதா நதியை பாதுகாக்க முதல்வர் அதிரடி நடவடிக்கை!

மத்தியப்பிரதேச மாநிலத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் நர்மதா நதியில் மணல் அள்ளத் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் அறிவித்துள்ளார்.

நர்மதா நதி

மாநில முதல்வரின் இந்த அறிவிப்பு சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. ’அமர்கண்டக்’ என்ற பகுதியில் உற்பத்தியாகும் நர்மதா நதி, சுமார் 1000 கி.மீட்டர் பயணம் செய்து மத்தியப்பிரதேச மாநிலத்தில் மட்டும் 16 மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது.

மணல் கடத்தல் மாஃபியாக்களின் பிடியில் இருந்த நர்மதா நதியில் இனி மணல் அள்ளினால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்று தெரிவித்த முதல்வர், “நர்மதா நதியும் அதனைச் சார்ந்திருக்கும் உயிர்கோளப் பகுதிகளும் இனிப் பாதுகாக்கப்படும். இதற்காக மத்திய பிரதேச அரசு சார்பில் கோரக்பூர் ஐஐடியில் பணிபுரியும் சுற்றுச்சூழல் வல்லுநர்களை உள்ளடக்கிய ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் கொடுத்த எச்சரிக்கை அறிக்கையை அடிப்படையாக வைத்துத்தான் இந்த முடிவை அரசு எடுத்திருக்கிறது. இனி நர்மதா ஆற்றைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு உடனடியாகக் கவனம் செலுத்தும்” என்றார்.

- எம்.கணேஷ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!