வெளியிடப்பட்ட நேரம்: 17:53 (23/05/2017)

கடைசி தொடர்பு:18:07 (23/05/2017)

ராஜீவ் கொலை வழக்கில் பேசப்பட்ட சந்திராசாமி காலமானார்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர் எனப் பேசப்பட்ட சந்திராசாமி இன்று காலமானார்.

சந்திராசாமி

1991 மே 21ஆம் தேதி சென்னையில் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனிதவெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் அமைப்பின் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடையவர் எனப் பேசப்பட்ட சந்திராசாமி இன்று காலமானார். டெல்லியில் வசித்து வந்த அவர் உடல்நிலைக் கோளாறு காரணமாக உயிரிழந்தார். ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்கப்பட வேண்டியவர் என ஜெயின் கமிஷனால் குறிப்பிடப்பட்டவர் இந்த சந்திராசாமி. இவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு நெருக்கமானவர் ஆவார்.