வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (23/05/2017)

கடைசி தொடர்பு:20:35 (23/05/2017)

உதவும் உள்ளங்களால் உருவான நூலகம்... மும்பை இளைஞரின் அசத்தல் முயற்சி!

பல்வேறு நபர்களின் உதவியால், பழைய புத்தகங்களைப் பெற்று நூலகத்தை நடத்தி வருகிறார் மும்பையைச் சேர்ந்த புஷ்பேந்திர பாண்டியா.

பாண்டியா

இன்றைய டிஜிட்டல் காலத்தில் புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து வருகிறது. பி.டி.எஃப், இ-புக், அமேசான் கின்டில் என டிஜிட்டல் வடிவில் புத்தகங்களை படிக்க பல வழிகள் வந்துவிட்டன. ஆனால்  சிலருக்கு புத்தகத்தின் வாசனையும், காகிதத்தின் சினுங்கலும் டிஜிட்டலில் கிடப்பதில்லை. அப்படியானவர்களுக்குத் தான் மும்பையில் நூலகத்தை நடத்தி வருகிறார் புஷ்பேந்திர பாண்டியா. இது இந்தியாவின் முதல் crowd sourcing நூலகமாகும்.

மும்பையில் உள்ள இவரது நூலகத்தில் அநேகமான புத்தகங்கள் பல்வேறு நபர்கள் இனாமாக அளித்தவை. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இவர் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புத்தகங்களை சேகரித்து வருகிறார். 400 புத்தகங்களுடன் தொடங்கிய இவரது நூலகத்தில் தற்போது 2000 க்கும் அதிகமான புத்தகங்கள் உள்ளன. மேலும் டெல்லி, கொல்கத்தா, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களுக்கு தனது நூலகத்தை விரிவுப்படுத்தவுள்ளார் புஷ்பேந்திர பாண்டியா.