காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது! | Gun battle started in pulwama district in kashmir

வெளியிடப்பட்ட நேரம்: 23:56 (23/05/2017)

கடைசி தொடர்பு:09:50 (24/05/2017)

காஷ்மீரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியது!

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியுள்ளது.

kashmir

கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அண்மையில் இரு இந்திய வீரர்களின் தலை எல்லைப் பகுதியில் துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து இன்று இந்திய ராணுவம் பாகிஸ்தான் பதுங்குக் குழிகள் மேல் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் புல்வாமா மாவட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச் சூடு தொடங்கியுள்ளது. இந்திய ராணுவத்தினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகிறது. இதில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூன்று பேர் ராணுவத்திடம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளதாகவும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கியத் தளபதி சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.