ரூ.12 கோடி மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல்..!

snake

மேற்கு வங்கத்தில், 12 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலுள்ள வடக்கு தினாஜ்பூர் பகுதியில், எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய சோதனையின்போது, இந்தப் பாம்பு விஷம் பிடிபட்டது. இதுதொடர்பாக, சுதீப் திக்னா என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கடத்தப்பட்ட பாம்பு விஷத்தை அவர் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யவிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வங்க தேசத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே இதுபோன்ற பாம்பு விஷம் கடத்தல் நடந்துவருவதும் தெரியவந்துள்ளது. 

பாம்பு விஷம் கடத்தல் தொடர்பாக, சமீபத்தில் தொடர் புகார்கள் வரத்தொடங்கியுள்ளன. இதனால், எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் படுத்தப்பட்டனர். வனத்துறையினருக்கு நேற்று வந்த ரகசியத் தகவலைத் தொடர்ந்து, 12 கோடி ரூபாய் மதிப்பிலான பாம்பு விஷம் பறிமுதல்செய்யப்பட்டது. தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள சுதீப் திக்னாவிடம் தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!