இன்று காலை 11.30 மணிக்கு மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி

edappadi palanisamy

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச உள்ளார். இதற்காக, நேற்று டெல்லி சென்றார்.  அவரை, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிரதமர் மோடியை இன்று முற்பகல் 11.30 மணியளவில் சந்தித்துப் பேசுகிறார் முதல்வர் பழனிசாமி. இந்தச் சந்திப்பில், வறட்சி நிவாரணம் உட்பட, விவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்குறித்து ஆலோசனை நடத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விரைவில் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல்குறித்தும் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 19 ஆம் தேதி, பிரதமர் மோடியைச் சந்தித்தார். அப்போது, அவருடன் கே.பி.முனுசாமி, வி.மைத்ரேயன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சென்றனர். சந்திப்பு முடிந்து வெளியே வந்த ஓ.பன்னீர் செல்வம், 'தமிழக அரசியல் குறித்துப் பேசவில்லை' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!