வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (24/05/2017)

கடைசி தொடர்பு:14:19 (24/05/2017)

விருது வென்ற ராணுவ வீரருக்கு எதிராகப் போராட்டம்!

ஜீப்பில் இளைஞரைக் கட்டிவைத்துச் சென்றதற்காக விருது வாங்கிய ராணுவ அதிகாரி கோகாய்க்கு எதிராக, தேசிய மாநாட்டுக் கட்சியின் மகளிர் பிரிவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

கோகாய்

ஏப்ரல் 9-ம் தேதி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்பொது, ராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, கிளர்ச்சியாளர்கள் கற்களை வீசித் தாக்கினர். அதிலிருந்து தப்பிக்க, மேஜர் கோகாய் என்பவர் இளைஞர் ஒருவரைப் பிடித்து, ஜீப்பின் முன் பக்கம் கட்டிவைத்து ஓட்டிச் சென்றார்.  அதன் வீடியோ காட்சிகள், சமூக வலைதளங்களில் அதிர்வலைகளைக் கிளப்பியது. மேலும், இந்தச் செயலைப் பாராட்டி, மேஜர் கோகாய் ராணுவத்தால் கௌரவிக்கப்பட்டார். 

 ராணுவ அதிகாரியின் இந்தச் செயலைப் பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் மகளிர் பிரிவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், அவர்கள் மாநில அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களிடமிருந்து பொது மக்களைக் காப்பாற்றவே, ஜீப்பில் இளைஞரைக் கட்டிச் சென்றதாக மேஜர் கோகாய் கூறியது குறிப்பிடத்தக்கது.