ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர் திருமணத்துக்கு பாலிவுட் நடிகர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் திருமணத்துக்குப் பரிசாக, புதிய அப்பார்ட்மென்ட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய். 

acid

மகாராஷ்டிராவின் தானே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் லலிதா, 2012ஆம் ஆண்டு ஆசிட் வீ ச்சால் தாக்கப்பட்டார். முன்விரோதம் காரணமாக, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே ஆசிட் வீசித் தாக்கினர். இதனால் அவரது முகம் கடுமையாகச் சிதைக்கப்பட்டது. இதையடுத்து, 17 அறுவைசிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். இதனிடையே, தற்போது அவருக்கு ராகுல்குமார் என்ற சிசிடிவி ஆபரேட்டருடன் திருமணம் நடந்துள்ளது. ராங் கால் கொடுத்து, இருவரும் நட்பாகி, காதலித்து, தற்போது திருமணம் செய்துள்ளனர்.

இந்நிலையில், திருமணமான இளம் தம்பதிகளுக்கு, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் புதிய அப்பார்ட்மென்ட் ஒன்றைப் பரிசளித்துள்ளார். மேலும், அவர் லலிதாவின் திருமணத்துக்கு நேரில் சென்று வாழ்த்துக்களையும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ராகுல் குமார் கூறுகையில், 'அவள் முகம் சிதைந்திருந்தாலும் உள்ளம் சிதையவில்லை. ஒரு ராங் கால் எனது வாழ்க்கையை மாற்றும் என்று எதிர்பார்க்கவில்லை' எனக் கூறியுள்ளார். லலிதா கூறுகையில், 'எனக்குத் திருமணம் ஆகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எல்லாம் தெரிந்தும் ராகுல் என்னைத் திருமணம் செய்துகொண்டது நெகிழ்ச்சியாக உள்ளது' எனக் கூறியுள்ளார். .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!