வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (24/05/2017)

கடைசி தொடர்பு:17:40 (24/05/2017)

லாலு பிரசாத் மகளுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

misa

ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் லாலு பிரசாத் யாதவ். இவர் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்தவர். இந்நிலையில் பினாமி பெயரில் சொத்துக் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரது குடும்பத்துக்குச் சொந்தமான 22 இடங்களில் சில தினங்களுக்கு முன்னர் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதனிடையே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையில் மிசா பாரதியின் ஆடிட்டர் ராஜேஷ் அகர்வாலை நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இந்நிலையில் மிசா பாரதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் அவரும் விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.