உச்சத்தில் தொடங்கி வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை! | BSE Sensex falls down!

வெளியிடப்பட்ட நேரம்: 20:38 (24/05/2017)

கடைசி தொடர்பு:20:38 (24/05/2017)

உச்சத்தில் தொடங்கி வீழ்ச்சியில் முடிந்த இந்திய பங்குச்சந்தை!

இன்று காலை உச்சத்தில் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை நிலவரம் முடிவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

பங்குச்சந்தை

கடந்த சில நாள்களாகவே சரிவில் இருந்து வந்த இந்திய பங்குச்சந்தை நிலவரம் இன்று காலை உயர்ந்து காணப்பட்டது. இன்றைய நாள் தொடக்கத்தில், மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ், 120.54 புள்ளிகள் உயர்ந்து 30,485.79 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 22.35 புள்ளிகள் உயர்ந்து 9,408.50 புள்ளிகளாகவும் இருந்தது. பங்குச்சந்தையின் இந்த திடீர் ஏற்றத்தால் ஆட்டோமொபைல்ஸ், உலோகம், ரியல்-எஸ்டேட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன.

இந்நிலையில் இன்று இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் நிலவிய பதற்றம் காரணமாக உச்சத்தில் இருந்த பங்கு நிலவரம் திடீர் வீழ்ச்சியை சந்தித்தது. இதனால், இன்றைய நாளின் முடிவில் மும்பை பங்குச்சந்தை குறீயீட்டு எண் சென்செக்ஸ், 63.61 புள்ளிகள் வீழ்ந்து 30,301 புள்ளிகளாகவும் தேசிய பங்குச்சந்தை குறீயீட்டு எண் நிஃப்டி, 25.60 புள்ளிகள் வீழ்ந்து 9,360 புள்ளிகளாகவும் நிறைவடைந்தது.


[X] Close

[X] Close