பிரதமரிடம் அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி! | TN CM Palanisamy addressed Media after his meeting with PM

வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (24/05/2017)

கடைசி தொடர்பு:21:36 (24/05/2017)

பிரதமரிடம் அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு 7.40 மணிக்கு டெல்லி சென்றடைந்தார். அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோரும் முதல்வருடன் டெல்லி சென்றிருந்தனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த முதல்வர், சென்னை விமான நிலையத்தில்  பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.  

அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன்.  தமிழக அரசின் திட்டங்களுக்கு விரைவில் தேவையான நிதி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் திட்டத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்களும் மீனவர்களின் 135 படகுகளும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்பதை எடுத்துரைத்தேன். மேலும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைக்கவும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவும் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்' என்று கூறினார்.