Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பள்ளிகளில் மலையாளம் கட்டாயம்; கேரளாவில் சட்டம் நிறைவேற்றம்..!

கேரள மாநிலத்திலுள்ள 'அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மலையாளம் கற்பது கட்டாயம்' என்று நேற்று சட்டமன்றத்தில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மலையாளம் பேசும் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கக்கூடாது என மசோதாவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கேரள அமைச்சரவையில் மலையாளம் கட்டாயம் என்று அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. 


இதுகுறித்து கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் கூறுகையில், ''கேரளாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் கற்பிக்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளியாக இருந்தாலும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உள்பட, கேரளாவில் செயல்படும் அனைத்துப் பள்ளிகளிலும் மலையாளம் கட்டாயம் கற்பிக்க வேண்டும். எந்த வகையிலும் மலையாளம் பேசுவதைத் தடுக்கக்கூடாது'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close