Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து! உயிர் தப்பிய முதல்வர்!

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர்.

ஹெலிகாப்டர் விபத்து

  மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில், முதல்வர் சென்ற ஹெலிகாப்டர்  இன்று மதியம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயணத்தில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுடன்   ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய  அனைவரும் காயங்களின்றி உயிர்பிழைத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல்களை உடனடியாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்தார், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். தன் ட்விட்டர் பதிவில், ‘நாங்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. நானும் என்னுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக உள்ளோம். வருந்தப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நடந்த உடனேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement