மோடியின் மூன்றாண்டு ஆட்சி...'அச்சே தின்' என்ன ஆச்சு? #VikatanSurvey

மோடி

மோடி அலை வீசத் தொடங்கி மூன்றாண்டுகள் முடியப்போகிறது. மத்தியில் ஆளும் கட்சியான பி.ஜே.பியே எதிர்பார்க்காத அளவிலான சுனாமி அலையாகவே மோடியின் நடவடிக்கைகள் இந்த மூன்றாண்டுகளில் இருந்திருக்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டம், நெடுவாசல் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என மக்களே மத்திய அரசுக்கு எதிராக முன்னெடுத்த பல நாள் போராட்டங்கள் ஒரு பக்கம் மற்றொரு பக்கம் பணமுடக்கம், கருப்பு பண நீக்கம், எல்லையில் இராணுவத்தின் அதிரடி நடவடிக்கைகள் என அடுத்தடுத்து ட்விஸ்டுகளைக் கொடுத்து வருகிறது மோடி அரசு. பணத்துக்காக வங்கியில் வரிசையில் நின்றது தொடங்கி, முழுக்க முழுக்க ஆன்லைனில் பணம் செலுத்தும் முறைக்கு மாறிக் கொண்டிருப்பது வரை விவசாயிகள் பொறியாளர்கள் அன்றாடம்காய்ச்சிகள் என மோடி அரசு தனிப்பட்ட மனித வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில், ”இன்னும் நமக்கு என்ன காத்துக் கொண்டிருக்கிறதோ?” என்கிற கேள்வி ஒருபக்கம். அதே சமயம்  மூன்றாண்டுகள் முடியவுள்ள நிலையில் தற்போது இருக்கும் மோடி தலைமையிலான அரசும் அதன் செயலாக்கங்கள் குறித்தும் உங்கள் கருத்துகள் என்ன?  கீழே உள்ள படிவத்தில் பதிலளிக்கவும்....

 

loading...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!