Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியீடு - பிரகாஷ் ஜவடேகர் விளக்கம்..!

'சிபிஎஸ்இ +2 வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும். மாணவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்' என்று மத்திய மனிதவளத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.


சிபிஎஸ்இ +2-ம் வகுப்புத் தேர்வுகள், ஏப்ரல் மாதம் நடைபெற்றன. அதற்கான முடிவுகள் மே 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, தேர்வு முடிவுகள் வெளியிடுவது தள்ளிவைக்கப்பட்டது. சிபிஎஸ்இ +2 பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட கடினமான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்கும் வழக்கமான முறையை ரத்துசெய்வதாக சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்தது. 

இந்த நிலையில், கருணை மதிப்பெண் முறையை ரத்துசெய்வதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு, சிபிஎஸ்இ-யின் முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்தத் திடீர் அறிவிப்பால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தது. இதனால், இந்த ஆண்டில் புதிய ரத்து முடிவுகள் எதையும் அமல்படுத்த வேண்டாம் என உயர்நீதிமன்றம் சிபிஎஸ்இ இயக்குநரகத்துக்கு அறிவுறுத்தியது.

இதையடுத்து, தேர்வு முடிவுகள் வெளியாவது ஒத்திவைக்கப்பட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ இயக்குநரகம் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 'சிபிஎஸ்இ + 2 தேர்வு முடிவுகளை வெளியிடும் பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. திட்டமிட்டபடி விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும். தேர்வு முடிவுகள் குறித்த விவகாரத்தில் பெற்றோர்கள், மாணவர்கள்  பதற்றப்பட வேண்டாம்' என்றார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement