முதல் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார் மொரிஷியஸ் பிரதமர்!

அரசு முறைப் பயணமாக இன்று இந்தியா வந்தார் மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்நாத். மூன்று நாள்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொரிஷியஸ் பிரதமர்

இன்று காலை இந்தியா வந்திறங்கிய மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்நாத்துக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் உபேந்திரா குஷ்வாஹா சிறப்பான வரவேற்பினை அளித்தார். நாளை இந்தியப் பிரதமர் மோடியை அவரது இல்லத்திலேயே சந்திக்க உள்ளார். இன்று, மாலை டெல்லியில் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்ளும் வணிக ரீதியான நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். 

கடந்த ஜனவரி மாதம் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்ட பிரவீந்த் ஜூக்நாத் தன்னுடைய முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். பிரதமருடன் துணைப் பிரதமர் இவான், நிதித்துறை அதிகாரிகள் மற்றும் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்கள் உடன் வந்துள்ளனர்.

மொரிஷியஸ் ஒரு தனி அரசாங்கமாக உருவாகிய காலத்திலிருந்தே மொரிஷியஸின் முன்னேற்றத்தில் சம அளவு பங்கு கொண்டவர்கள் இந்தியர்கள். 19 ஆம் நூற்றாண்டுகளில் கரும்பு தோட்டத்தில் பணிபுரியச் சென்று, இன்று மொரிஷியஸ் தீவில் பலரும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜூக்நாத்தும் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!